ஆம்புலன்ஸின் அலறல்
வெறும் ஓசையல்ல
மரண ஓலத்தின்
முன் அறிவிப்பாகவும் இருக்கலாம்.
உனக்கு கேட்கவில்லையா
உன்னை போலதானே அவனோ / அவளோ
உன் குழந்தையை போல
அவனுடைய மகளோ / மகனோ
இவர்களின் வரவை
எதிர்நோக்கி காத்திருக்கலாம்.
என்னை ஏளனம் செய்து
ஏமாற்றிவிடாதே அவர்களை
நீ இரண்டு நிமிடம்
தாமதமாக கூட போய்
பார்த்துவிடலாம் கொஞ்சி மகிழலாம்
என்னால் இயலாது
நான் உன்னிடம் கேட்பது எல்லாம்
அவன் வலியால் அலறுகிறான்
நீ கொஞ்சம் வழி மட்டும் விடுவே
Comments
Post a Comment